ஆஸ்கார்ஸ்

Nonfiction, Entertainment, Film, Screenwriting, Performing Arts
Cover of the book ஆஸ்கார்ஸ் by Varshini Tripura, Andhazdhi
View on Amazon View on AbeBooks View on Kobo View on B.Depository View on eBay View on Walmart
Author: Varshini Tripura ISBN: 1230001951592
Publisher: Andhazdhi Publication: October 4, 2017
Imprint: Language: English
Author: Varshini Tripura
ISBN: 1230001951592
Publisher: Andhazdhi
Publication: October 4, 2017
Imprint:
Language: English

சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமலும், கதைக்கும்,  திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம் அறியாமலும், கதை, கதாபாத்திரத்தின் உளவியல் தளங்களை தொட முடியாமலும், புது முயற்சிகளை எடுக்க தைரியம் இல்லாததாலும், தளங்களை கடந்த தாகம் இல்லாததாலும், தொழிற்நுட்பங்களை கற்கும் ஏக்கம் இல்லாத்ததாலும்,  கலைஞன் என கர்வம் கொள்ளாமல் கடந்து போக நினைப்பதாலும் உலக அரங்கை நாம் தவற விடுகிறோம்.

ஆஸ்கார் போன்ற உலகின் தலை சிறந்த திரைப்பட விருதுகள் அரங்கில் எப்படியான திரைப்படங்கள் கவனிக்கப்படுகின்றன, போற்றப்படுகின்றன என்பதை குறித்த பகுப்பாய்வாக இந்த புத்தகத்தை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். ஆஸ்கார் குறித்த திரைப்படங்கள், உலக சினிமா குறித்த திரைப்படங்கள் என்று சொல்லிவிட்டு அந்த திரைப்படங்களின் கதைகளை எடுத்து வைத்துக்கொண்டு பாட்டி வடை சுட்டக் கதையாக இழுவைப்போட்டுக்கொண்டிருக்காமல் எப்படியான திரைக்கதை உத்திகளை ஆஸ்கார் போன்ற விருதுகளுக்கு செல்லும் திரைப்படங்கள் பயன்படுத்துகின்றன என்பதை குறித்து பேச வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டு ஏழு படங்களை நான் உதாரணமாக இந்த புத்தகத்தில் எடுத்திருக்கிறேன்.

அவை The Artist, Gladiator, The Lord Of The Rings, 12 Years A Slave, Ida, Secret In Their Eyes மற்றும் The Sea Inside. இதில் Ida (போலந்து), Secret In Their Eyes (அர்ஜென்டினா), The Sea Inside  (ஸ்பெயின்) ஆகியவைகள் வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியிட்டு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை ஆஸ்காரில் தட்டி சென்றவை. The Lord Of The Rings, Gladiator, The Artist, 12 Years A Slave ஆகியவை சிறந்த படங்களுக்காகவும், மற்ற பிரிவுகளின் கீழும் விருதுகளை அள்ளியவை.

இந்த ஏழு படங்களையும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதமாக  வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்திற்கு அடிப்படையாக இருக்கும் திரைகதையையும், அதன் உளவியலையும் முக்கியமாக பேசியிருக்கிறேன். அதை தவிர VFX, கேமிரா கோணங்கள், எடிட்டிங் தொழிற் நுட்பங்களும், எதற்காக இந்த படங்கள் ஆஸ்காரில் தேர்ந்தெடுக்கபட்டன என்பதற்கான காரணங்களும் விளக்கப்பட்டிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் நமது படங்களும், குறும்படங்களும் போட்டயிட வாய்ப்பாக இருக்கும் ஆஸ்கார் பிரிவுகள் குறித்தும், அதற்கான விதி முறைகள் குறித்தும் விளக்கப்பட்டு உள்ளன.

More books from Andhazdhi

Cover of the book மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள் by Varshini Tripura
Cover of the book கிருமிக்கண்ட மானிடம் by Varshini Tripura
Cover of the book இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand) by Varshini Tripura
Cover of the book உருகும் பூமி உறையும் உயிர்கள் by Varshini Tripura
Cover of the book புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு கோப்பை ஞானமும் by Varshini Tripura
Cover of the book கேஃபேப் – Kayfabe ரஸ்லிங் நாடகம் by Varshini Tripura
Cover of the book சமையலறையில் கல்லறை by Varshini Tripura
Cover of the book பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள் by Varshini Tripura
Cover of the book கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950) by Varshini Tripura
Cover of the book உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை by Varshini Tripura
Cover of the book தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம் by Varshini Tripura
Cover of the book குத்தகைக்கு பொதுப்புத்தி புதிய பரிணாம கொள்கை by Varshini Tripura
Cover of the book போதை அடிமைகள் by Varshini Tripura
Cover of the book பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது by Varshini Tripura
Cover of the book கிளியோபாட்ரா by Varshini Tripura
We use our own "cookies" and third party cookies to improve services and to see statistical information. By using this website, you agree to our Privacy Policy