பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது

Biography & Memoir, Political
Cover of the book பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது by Naveena Alexander, Andhazdhi
View on Amazon View on AbeBooks View on Kobo View on B.Depository View on eBay View on Walmart
Author: Naveena Alexander ISBN: 1230001951776
Publisher: Andhazdhi Publication: October 5, 2017
Imprint: Language: English
Author: Naveena Alexander
ISBN: 1230001951776
Publisher: Andhazdhi
Publication: October 5, 2017
Imprint:
Language: English

பிடல் காஸ்டிரோ குறித்த இந்தப் புத்தகம் முழுக்கப் முழுக்க பிடலே தனது வாழ்கை குறித்துச் சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்து  எழுதப்பட்டது. தனது இளமை பருவம் குறித்தும், பள்ளிப் பருவம் குறித்தும், மாணவப் பருவம் குறித்தும், புரட்சிகரப் போராட்டங்கள் குறித்தும் அவரே நினைவு கூர்ந்த விசயங்களே இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன. ஆகப் பிடல் குறித்த இந்தப் புத்தகம் நம்பகமானது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

எதற்கு எடுத்த எடுப்பில் புத்தகத்தின் நம்பகத்தன்மை குறித்துப் பேசவேண்டும்? பிடல் காஸ்டிரோவின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்துப் பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுதான் இங்கே பிரச்சனையே. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் தங்களின் சித்தாந்த நம்பிக்கையின் பின் புலத்திலிருந்து பிடலின் வாழ்க்கையை அணுகியிருப்பதால் அவர்களின் புத்தகங்கள் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பிடல் காஸ்டிரோவை நமக்கு முன் நிறுத்துகின்றன. வலதுசாரி சிந்தனைகொண்ட அமெரிக்க எழுத்தாளர்களின் பிடல் குறித்த புத்தகங்கள் அனைத்தும் அவரை ஒரு சர்வாதிகாரியைப் போலவே சித்தரிப்பதிலிருந்து தவறுவது இல்லை. அது அவர்களுடைய கருத்து. அதை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமையும் உண்டு.

ஆனால் பிடல் காஸ்டிரோ குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒருவர் அத்தகைய கருத்துகள் கொண்ட புத்தகங்களைப் படிக்கின்றபோது அவர்கள் பிடல் குறித்து மனதிற்குள் எடுக்கும் முடிவு ஒருதலை பட்சமானதாகவே இருக்கும். அப்படியான ஒரு தவறான முடிவிற்கு ஒரு வாசகனை நெட்டி தள்ளுவது வாசிப்பு பழக்கத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அப்படியான ஒரு துரோகத்தை இந்தப் புத்தகம் செய்யாது என்பது உறுதி. இந்தப் புத்தகத்தில் பிடல் காஸ்டிரோவை பிடல் காஸ்டிரோவாக நீங்கள் பார்க்கலாம்.

இந்தப் புத்தகம் பெரிதும் அவர் வாழ்ந்த வாழ்வைப் பற்றி அவரே பேசியவைகளில் இருந்து கட்டமைக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை எழுதப் பெரும் உதவியாக இருந்த புத்தகங்கள் இரண்டு. ஒன்று இக்னேஷியோ ரமோனே எழுதிய My Life Fidel Castro மற்றொன்று லேய்செஸ்டர் கால்ட்மன் எழுதிய The Real Fidel Castro.

காவியங்களின் காலம் மாத்திரமே உன்னதமான தலைவர்களின், புரட்சியாளர்களின், வீரர்களின், வரலாற்றைப் புரட்டிப்போட்ட நாயகர்களின்  காலமாக இருக்கும் என்று நினைப்போமேயானால் காவியங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கக் கூடும். காவியங்களுக்காக வேண்டி இவர்கள் மண்ணில் பிறப்பது கிடையாது. காவியங்கள் வேண்டுமானால் இவர்களுக்காகப் பிறப்பு எடுக்கலாம். தலைவனாகவும் நாயகனாகவும் இவர்களைக் காவியங்கள் தங்களுக்குள் வரித்துக்கொள்கின்றன.

More books from Andhazdhi

Cover of the book VFX Mo-Cap, Matchmoving, Compositing உலக சினிமா உத்திகள் by Naveena Alexander
Cover of the book கேஃபேப் – Kayfabe ரஸ்லிங் நாடகம் by Naveena Alexander
Cover of the book இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand) by Naveena Alexander
Cover of the book சமையலறையில் கல்லறை by Naveena Alexander
Cover of the book கொரில்லா பிளிம் மேக்கிங் by Naveena Alexander
Cover of the book தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம் by Naveena Alexander
Cover of the book ஆஸ்கார்ஸ் by Naveena Alexander
Cover of the book உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள் by Naveena Alexander
Cover of the book கிளியோபாட்ரா by Naveena Alexander
Cover of the book உருகும் பூமி உறையும் உயிர்கள் by Naveena Alexander
Cover of the book போதை அடிமைகள் by Naveena Alexander
Cover of the book எகிப்தின் மர்மங்கள் பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல by Naveena Alexander
Cover of the book கிருமிக்கண்ட மானிடம் by Naveena Alexander
Cover of the book குத்தகைக்கு பொதுப்புத்தி புதிய பரிணாம கொள்கை by Naveena Alexander
Cover of the book கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை) (கி.மு. 7,00,000 - கி.பி. 1950) by Naveena Alexander
We use our own "cookies" and third party cookies to improve services and to see statistical information. By using this website, you agree to our Privacy Policy