Author: | Naveena Alexander | ISBN: | 1230001951691 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951691 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
வழமையான சினிமா மேக்கிங் முறைகளையும் தாண்டி இண்டி (Independent) பிளிம் மேக்கிங், லோ பட்ஜெட் பிளிம் மேக்கிங் மற்றும் கொரில்லா பிளிம் மேக்கிங் என்று சில வழி முறைகள் இருக்கின்றன. இந்த மாற்று வழி முறைகள் தோன்ற காரணமென்ன? சிறப்பான கேள்வி. வழமையான சினிமா மேக்கிங் என்பது கால, மனித, பண பலத்தையும் இந்த மூன்றின் விரயத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படி மூன்றையும் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்கள் நிச்சயம் ஓடியே ஆக வேண்டும் இல்லையென்றால் மூன்றும் இழுத்து மூடப்பட்ட அணு உலைகளுக்கு நிகரானதாகிவிடும். அதாவது இதன் பின்விளைவுகள் பலரின் வாழ்க்கையைப் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
ஆனால் திரைப்படங்களின் வெற்றி என்பது நிச்சயத்தன்மை கொண்டது கிடையாது. அடிப்படையில் சினிமா என்பதுக் கலை வடிவம் என்பதால் அதன் வெற்றிக்கான நிச்சயத்தன்மை என்பது உறுதியில்லாத ஒன்றுதான். கேளிக்கை மட்டுமே நிச்சய வெற்றியை தரக் கூடியது. பெரும் மனித உழைப்பு, கால மற்றும் பணச் செலவழிப்பில் வழமையான அமைப்பில் உருவாக்கப்படும் திரைப்படங்களின் நிச்சய வெற்றியை உறுதி செய்யக் கேளிக்கை என்கிற அம்சம் சினிமா கலையில் கலந்துவிடப்படுகிறது. நிச்சய வெற்றி இல்லையென்றாலும் கையைக் கடிக்காத நட்டம் ஏற்படவில்லை என்று தப்பித்துக்கொள்ள வேண்டி. ஆக வழமையான சினிமா முறையிலான மேக்கிங் என்பது அதன் உள்ளார்ந்த தன்மையில் கேளிக்கையைக் கோரி நிற்கிறது தன்னை தான் காப்பாற்றிக்கொள்ள.
கலையில் கேளிக்கையைக் கலந்துவிட்டால் அது கலையாக நீடிக்க முடியாது என்பது சொல்லி புரியவைக்க வேண்டிய விசயமல்ல. வழமையான முறையில் சினிமா மேக்கிங்கை மேற்கொள்ளும் ஒரு இயக்குநர் கண்டிப்பாகக் கலையில் நிகழும் இந்தக் கேளிக்கை கலப்பை புறம் தள்ளிவிட முடியாது. அப்படியே அவர் புறம் தள்ளிவிட்டு வழமையான சினிமா மேக்கிங் முறையில் ஒரு கலைப்படைப்பை (ஆர்ட்ஹவுஸ் திரைப்படம்) எடுக்கத் துணிவாரேயானால் அது நிச்சயம் அணு உலையைச் சோறு சமைக்கும் உலையாகக் குறைத்து மதிப்பிடுவதற்கு நிகரானதாகும். தன்னையும் காப்பாற்றிக்கொண்டு தன் படைப்பில் முதலீடு செய்யப்படும் மனித உழைப்பு, பண மற்றும் காலச் செலவழிப்புக்களையும் காப்பாற்றிக் கரை சேர்க்க வேண்டுமானால் நிச்சயம் ஒரு இயக்குநர் தன்னுடைய படைப்புச் சுதந்திரத்தை கேளிக்கைக்கு அடகு வைத்தே ஆகவேண்டும். இது வழமையான சினிமா மேக்கிங் முறையில் தவிர்க்க முடியாத ஒரு கட்டாய நிர்பந்தமாகும்.