Author: | Naveena Alexander, Varshini Tripura | ISBN: | 1230001951813 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander, Varshini Tripura |
ISBN: | 1230001951813 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
கலைக்கும் அதை சாத்தியப்படுத்தும் தொழில் நுட்பங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். கலைகளை வெளிப்படுத்த உதவும் அது சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒரு கட்டத்தில் தான் வெளிப்படுத்த வந்த கலைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மையான இடத்தை அதுவே பிடித்துக்கொள்வது என்பது காலம்தோறும் தொடர்ந்துகொண்டிருக்கும் அக்கப்போர் சங்கதி. சினிமா என்கிற நவீன கலையும் இதற்கு விதி விலக்கு கிடையாது.
மற்ற எந்த கலைகளையும் விட சினிமா கலை பல நிலைகளில் தொழில் நுட்பங்களை சார்ந்து இயங்க கூடிய ஒன்று. சின்ன தொழில் நுட்ப வளர்ச்சிகளும் கூட அதிகம் சினிமாவின் கலை வெளிப்பாட்டுத் தன்மையை மட்டுப்படுத்தி அதை தொழில் நுட்ப வளர்ச்சிகளின் வெளிப்பாடு ஒன்றாக மட்டுமே மாற்றிவிடும் அபாயம் அதிகம் இருக்கிறது. சினிமா கலையின் நூறு ஆண்டு கால வரலாற்றில் இது கண் கூடாகவே தெரியக் கூடிய ஒன்று. மெளனப் படங்களின் கலை வெளிப்பாட்டுத் தன்மையை பேசும் படங்களில் காண்பது அரிது.
பேசும் கருப்பு வெள்ளை திரைப்படங்களின் கலை வெளிப்பாட்டுத் தன்மையை, வண்ணத் திரைப்படங்களில் காண்பது கடினம். வண்ணத் திரைப்படங்களின் கலைத் தன்மையை இன்றைய VFX காட்சிகள் நிறைந்த திரைப்படங்களில் காண முடியாது. எதிர் காலத்தில் விர்டுவல் ரியாலிட்டி (Virtual Reality) மற்றும் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence) தொழில் நுட்ப வளர்ச்சிகளின் துணைகொண்டு வெளிவர இருக்கும் திரைப்படங்கள் VFX காட்சிகள் நிறைந்த திரைப்படங்களின் கலைத் தன்மையை வெளிப்படுத்துமா என்பது கேள்விக் குறிதான்.