Author: | Rajesh Kumar | ISBN: | 6580100401600 |
Publisher: | Pustaka Digital Media Pvt. Ltd., | Publication: | October 21, 2016 |
Imprint: | Pustaka Digital Media | Language: | Tamil |
Author: | Rajesh Kumar |
ISBN: | 6580100401600 |
Publisher: | Pustaka Digital Media Pvt. Ltd., |
Publication: | October 21, 2016 |
Imprint: | Pustaka Digital Media |
Language: | Tamil |
தென்றல் வரும் ஜன்னல் என்கின்ற இந்தத் தலைப்பைப் படித்தவுடன் இது ஒரு மென்மையான காதல் கதையாய் இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதே போல் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு புனையப்பட்ட கதையாய் இருக்குமோ என்று நினைத்தாலும் தவறு.
இது ஒரு மருத்துவம் சார்ந்த கதை. இந்த கதைக்கான கரு கிடைத்தது ஒரு கல்லூரிக்குள். எனக்கு நண்பராய் இருக்கும் பேராசிரியர் ஒருவரைப் பார்ப்பதற்காக நான் கோவையில் உள்ள விவசாயக் கல்லூரிக்கு சென்றிருந்த போது 'ஜெனிடிக்ஸ்' டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு மகேஷ்வரன் என்பவர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டு பேசினார்.
"ராஜேஷ்குமார் நீங்க எழுதின நிறைய நாவல்களைப் படிச்சிருக்கேன். பெரும்பாலும் உங்களுடைய நாவல்கள் க்ரைம் சம்பந்தப்பட்ட விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நீங்க ஏன் நவீன மருத்துவத்தை அடிப்படையாய் வைத்து நாவல் எழுதக்கூடாது?" என்று கேட்டார். நானும் "சமயம் வரும்போது எழுதுகிறேன்." என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தேன். ஆனால் அவரோ "நோ. நோ. சமயம் வரும் போது, எழுதறதாவது.? அதுக்கான சமயம் வந்தாச்சு." என்று சொல்லிவிட்டு ஒரு கேள்வியைக் கேட்டார்.
"ஜீன் தெரபி என்கிற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கீங்களா?"
"ம். கேள்விப்பட்டிருக்கேன், ஆனா அதுபற்றிய முழு விபரங்களும் எனக்குத் தெரியாது. புத்தகம் கிடைச்சா படிக்கணும்."அவர் சிரித்தார். "நீங்க எந்த புத்தகத்தையும் படிக்க வேண்டாம். நான் இப்போ ஒரு மணி நேரம் ஃப்ரீ. நீங்க ஃப்ரீயாய் இருந்தா சொல்லுங்க ரெண்டு பேரும் என்னோட ரூமுக்குப் போய்ப் பேசுவோம்."
நானும் ஒரு புதுவிஷயத்தை தெரிந்து கொள்வதற்காக அவரோடு புறப்பட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஜீன் தெரபியைப்பற்றி என்னிடம் பேசினார். மனிதர்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் காரணம் ஜெனடிக் பிராப்ளம்தான் என்று சொன்னவர், நம் உடம்பில் உள்ள செல் ஜீன்களை மாற்றம் செய்வதின் மூலம் எல்லாவகையான நோய்களையும் குணப்படுத்த முடியும் என்றார்.
நான் உடனே "ஆஹா. மருத்துவத்துறைக்குள் தென்றல் வீச ஆரம்பித்து விட்டது. இனி மக்கள் ஆரோக்கியமாக வாழலாம்." என்று சொன்னேன். அதற்கு அவர் 'இது தென்றல் மட்டும் இல்லை. புயலாகவும் மாற 50% வாய்ப்புள்ளது.' என்று சொல்லி ஜீன் தெரபியில் உள்ள ஆபத்துக்களை எடுத்துச் சொன்னபோது அதிர்ந்து போய்விட்டேன்.
இது தென்றல் வரும் ஜன்னல் மட்டும் இல்லை. புயலும் வரும் ஜன்னல் என்பதைப் புரிந்துகொண்டேன் பேராசிரியர் ஜீன் தெரபி பற்றி சொன்ன சாதக விஷயங்களையும் பாதக விஷயங்களையும் இந்த நாவலில் பதிவு பண்ணியுள்ளேன். படித்துப் பாருங்கள்
- ராஜேஷ்குமார்.