Author: | U. V. Swaminatha Iyer | ISBN: | 1230001978520 |
Publisher: | Kar Publishing | Publication: | October 27, 2017 |
Imprint: | Language: | Tamil |
Author: | U. V. Swaminatha Iyer |
ISBN: | 1230001978520 |
Publisher: | Kar Publishing |
Publication: | October 27, 2017 |
Imprint: | |
Language: | Tamil |
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர்
En Sarithiram by U. V. Swaminatha Iyer
உ.வே.சா எழுதிய என் சரித்திரம்
உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், தோன்றியிருக்காவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து நமக்குத் தந்தவர் உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்களை கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார் இந்த தமிழ்த்தாயின் தலைமகன். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிகிறது என்றால் அதற்கு உ.வே.சா காரணமாவார். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது என்றால் உ.வே.சா தான் காரணம். இவ்விலக்கியங்கள் இல்லாத தமிழையும் தமிழிலக்கியத்தையும் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு போன்றதாகும்.
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது.
இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.